திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூகப்பணி துறை சார்பில், "போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜெயத்ரா ஃபவுண்டேஷன் நிர்வாக தலைவர் டாக்டர். த மணிகண்டன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி நல்ல சமாரியன் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். R.M. சாம் தேவா ஆசீர் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் பேராசிரியர் டாக்டர்.M. டேனியல் சாலமன் மற்றும் ஜெயத்ரா ஃபவுண்டேஷன் மனநல ஆலோசகர் தீபா மற்றும் அன்பு ஆகிய இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதை பழக்கத்தின் அடிமைத்தனத்தையும் சமூகப் பிரச்சினைகளையும் அதன் பாதிப்புகளையும் பற்றி விழிப்புணர்வு அடைந்து பயன்பெற்றனர்.
" alt="" aria-hidden="true" />