சிறுபாக்கம் போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடக கலை நிகழ்ச்சி நடந்தது.
" alt="" aria-hidden="true" />
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் கவிதா விஜயகுமார் தலைமை தாங்கினார். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மங்களூர் பி.டி.ஓ., சங்கர், துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாபுதுரை வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.
திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகல் குறித்து நாடக கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வீடுகளில் தனித்து இருக்கவும், அவசியமின்றி வெளியே சுற்றி திரிவதை தவிர்க்கவும், முக கவசம் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.